Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விபத்தில்லா தீபாவளிக்கு தீயணைப்பு துறை அறிவுரை

விபத்தில்லா தீபாவளிக்கு தீயணைப்பு துறை அறிவுரை

விபத்தில்லா தீபாவளிக்கு தீயணைப்பு துறை அறிவுரை

விபத்தில்லா தீபாவளிக்கு தீயணைப்பு துறை அறிவுரை

ADDED : அக் 19, 2025 04:16 AM


Google News
பள்ளிப்பாளையம்: 'பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்' என, பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தீபாவளிக்கு பட்டாசுகளை நடு வீதியில் வைத்து வெடிப்பது ஆபத்தானதாகும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது, பெற்றோர் உடனிருப்பது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய நீளமான பத்தி கொண்டு, கண்ணுக்கு நேர் இல்லாமல், சாய்ந்த நிலையில் நின்றுகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பருத்தி, காட்டான் ஆடைகள் பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும்போது காலனி போட்டுக்கொள்ள வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை தொடுவதோ, எடுக்கவோ கூடாது. குடிசை பகுதி, மின் கம்பம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீ விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us