/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொடர் மழையால் செழிப்பு மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி தொடர் மழையால் செழிப்பு மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் செழிப்பு மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் செழிப்பு மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் செழிப்பு மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 14, 2025 07:48 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார், அளவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி, மின்னக்கல், அத்தனுார், தேங்கல்பாளையம், குட்டலாடம்பட்டி,ஆர்.புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நல்ல மழை பெய்தது. இப்பகுதி விவசாயிகள், மானாவாரி சாகுபடியாக ஆமணக்கு, கடலை, சோளம் ஆகியவை பயிரிட்டிருந்த நிலங்களில் களை அதிகளவு வளர்ந்திருந்தது.
மழை பெய்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியதால் மண் இறுகி களை செடிகளை வெட்டி எடுக்க முடியாமல் இருந்தது. நேற்று முன்தினம், பெய்த மழையால் விவசாயிகள் களை வெட்ட தொடங்கியுள்ளனர்.
அதேபோல், தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மழை பெய்வதால், சோளத்தட்டுகள், நிலக்கடலை செடிகள், மரவள்ளி போன்றவை செழிப்புடன் வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.