ADDED : செப் 05, 2025 01:16 AM
ப.வேலுார், பரமத்தி அருகே சித்தம்பூண்டி, சின்னபாளையத்தை சேர்ந்தவர் பாவாயி, 70. இவர் கடந்த, 2ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, ப.வேலுார் காவிரி ஆற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கிய பாவாயி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்தவர்கள் மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து, ப.வேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்