/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவுமுட்டை கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவு
முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவு
முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவு
முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவு
ADDED : ஜூன் 16, 2024 06:41 AM
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 10ல், கொள்முதல் விலை, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது
இந்நிலையில், 11ல் ஒரே நாளில், 60 காசு அதிகரித்து, 540 காசாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்கள், 15 காசு உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம், 20 காசு குறைக்கப்பட்டு, 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றும், 20 காசு சரிந்து, கொள்முதல் விலை, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில், கொள்முதல் விலை, 40 காசு குறைந்துள்ளது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 600, ஐதராபாத், 510, விஜயவாடா, 530, பர்வாலா, 435, மும்பை, 590, மைசூரு, 577, பெங்களூரு, 575, கோல்கட்டா, 530, டில்லி, 480 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 138 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது.