Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய சட்டங்களை ரத்து செய்ய இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்களை ரத்து செய்ய இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்களை ரத்து செய்ய இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்களை ரத்து செய்ய இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 02, 2024 08:06 AM


Google News
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இ.கம்யூ., (எம்.எல்.,) சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில், மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், ஜனநாயக உரிமை-களை பறிக்கும் புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்கா-லத்தை கேள்விக்குறியாக்கும், 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை திட்ட ஒதுக்கீட்டை ஆண்டுக்கு, 2.5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். கிராமப்புற தொழி-லாளர்களுக்கு அதிக நாட்கள் வேலை வழங்க வேண்டும். வீடற்ற ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில், பிரதமரின் கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். ஒன்-றிய செயலர் வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்-பினர்கள் முருகன், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us