/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'டிரில்லர்' வேலைக்கு வருவதாக ரூ.1.50 லட்சம் பெற்று மோசடி 'டிரில்லர்' வேலைக்கு வருவதாக ரூ.1.50 லட்சம் பெற்று மோசடி
'டிரில்லர்' வேலைக்கு வருவதாக ரூ.1.50 லட்சம் பெற்று மோசடி
'டிரில்லர்' வேலைக்கு வருவதாக ரூ.1.50 லட்சம் பெற்று மோசடி
'டிரில்லர்' வேலைக்கு வருவதாக ரூ.1.50 லட்சம் பெற்று மோசடி
ADDED : செப் 16, 2025 02:24 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் மிதுன், 25; ரிக்வண்டி அதிபர். இவர், தன் முகநுால் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தபோது, மொபைல் எண் ஒன்று வந்துள்ளது. அந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அதில், பேசிய நபர், தான் டிரில்லர் என்றும், வேலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு மிதுன், தனக்கு டிரில்லர் தேவைப்படுகிறார். அதனால், வேலையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, அந்த நபர் முன்பணமாக, 1.50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். தன் வங்கி கணக்கில் இருந்து, 'ஜிபே' மூலம், மிதுன், அந்த நபருக்கு, 1.50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஒருசில நாட்கள் ஆகியும், அந்த நபர் வேலைக்கு வரவில்லை. சந்தேகமடைந்த மிதுன் சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்புகொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மிதுன், இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.