ADDED : ஜூன் 07, 2025 01:30 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்., அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆலோசகர் தத்துவம் முன்னிலை வகித்தார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், வீடுகளில் மரக்கன்றுகள் நடுவதற்காக, வேப்பன், அரசு, புளியன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.