Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகள் நில உடைமை விபரம் பதிய வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விபரம் பதிய வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விபரம் பதிய வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விபரம் பதிய வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜூன் 26, 2025 01:30 AM


Google News
நாமக்கல், ;'விவசாயிகள் நில உடைமை விபரங்களை பதிவு செய்ய, வரும், 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர்(பொ) சுமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகள், அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற வசதியாகவும், அனைத்து விபரங்களையும் எலக்ட்ரானிக் முறையில் சேகரிக்க தமிழத்தில், வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடந்து வருகிறது.

மேலும், விவசாயிகள் பொது சேவை மையம் சென்று, அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின் அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025-26ம் நிதியாண்டிற்கான முதல் தவணை தொகை, நில உடைமை விபரங்கள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே

பிரதமரின் கவுரவ நிதித்திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்படும். அதனால், தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண்

விவசாயிகளுக்கு அவசியம்.

நாமக்கல் மாவட்டத்தில், 1,16,181 விவசாயிகளில், தற்போது, 87,452 விவசாயிகள் மட்டுமே 'அக்ரிஸ் டேக்' திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள், தங்களது கிராமங்களில் வேளாண்- உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று, தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், செல்போன் எண் ஆகிய விபரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி வரும், 30க்குள் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us