/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம் ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம்
ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம்
ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம்
ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம்
ADDED : மார் 18, 2025 01:37 AM
ஏப்., 4ல் பிளஸ் 2, ஏப்., 11ல் பிளஸ் 1 விடைத்தாள்
திருத்தும் பணி துவக்கம்: முகாம் அலுவலர் நியமனம்
நாமக்கல்:பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, வரும் ஏப்., 4ல் தொடங்கி, 17 வரையும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, வரும் ஏப்., 11ல் தொடங்கி, 30 வரையும் நடக்கிறது. தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகள், கடந்த, 3ல் தொடங்கி, வரும், 25 வரையும், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள், கடந்த, 5ல் தொடங்கி, 27 வரையும் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை, 18,461 பேர், மாணவ, மாணவியர், பிளஸ் -1 அரசு பொதுத்தேர்வை, 18,966 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அதற்காக, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 86 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களை சேகரிக்க, இரண்டு மையம், விடைத்தாள் திருத்துவதற்கு, மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின், பண்டலிங் செய்யப்பட்ட விடைத்தாள்கள், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழித்தட அலுவலர்கள் மூலம், போலீஸ் பாதுகாப்புடன், தனி வாகனத்தில் விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, சி.எம்.எஸ்., கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்பைரோ சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகம், திருச்செங்கோடு வித்யவிகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு இடங்களில் விடைத்தாள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, விடைத்தாள்கள் அங்கு பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் ஏப்., 4ல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி, 17ல் முடிகிறது. பிளஸ் 1 விடைத்தாள், ஏப்., 11ல் தொடங்கி, 30ல்
முடிகிறது.மேலும், முகாம் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் எர்ணாபுரம் சி.எம்.எஸ்., கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்பைரோ சி.பி.எஸ்.இ., பள்ளி முகாம் அலுவலராக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடு வரகூராம்பட்டி வித்யா விகாஸ் பள்ளி மைய முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கற்பகம், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மேல்நிலைப்பள்ளி மைய முகாம் அலுவலராக, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.