கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2024 12:05 PM
குமாரபாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கட்டுமான சங்க தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், வெப்படை நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 10,000 ரூபாய் போனஸாக வழங்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் குளறுபடிகளை சரிசெய்து தர வேண்டும். ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று உடனடியாக உதவி திட்டங்களை வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, 55வது வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேலுச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மா.கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணையன், கிளை பொருளாளர் கோவிந்தராஜ், வெப்படை கிளை நிர்வாகிகள் பழனிச்சாமி, கந்தாயி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
பங்கேற்றனர்.