ADDED : செப் 13, 2025 09:15 PM
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே சோழசிராமணி, மாரப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி மதன்குமார், 21, என்பவர், 15 வயது சிறுமியை கடத்தி, கோவிலில் கட்டாய திருமணம் செய்துள்ளார்.
ப.வேலுார் போலீசார் சிறுமியை மீட்டு, 'போக்சோ' சட்டத்தில், மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.