/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காதல் தோல்வியால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை காதல் தோல்வியால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
காதல் தோல்வியால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
காதல் தோல்வியால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
காதல் தோல்வியால் விரக்தி கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : ஜூன் 14, 2025 07:47 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி அடுத்த அருர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகள் அனுசுயா, 21. இவர், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், எம்.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், திருமணமான ஒரு வாலிபரை காதலித்துள்ளார். இவரது காதல் கை கூடாததால் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த அனுசுயா, நேற்று மாலை, 5:00 மணிக்கு எலிமருந்து தின்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு, பரிதாபமாக உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.