/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுரை ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுரை
ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுரை
ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுரை
ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 25, 2025 02:23 AM
எலச்சிபாளையம் :எலச்சிபாளையம், கூத்தம்பூண்டி கிராமம், மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், பொது சுகாதார கட்டடம் கட்டும் பணி, சக்திநாயக்கன்பாளையத்தில், 109.44 லட்சம் ரூபாயில், கோவில்பாளையம் முதல் கல்லாங்காடு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி; எலச்சிபாளையம் அரசு தொடக்க பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 34.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுமான பணிகளை, நேற்று, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மேட்டுப்புதுார் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை, எடை, உயரம் உள்ளிட்ட விபரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்து குழந்
தைகளுடன் உரையாடினார்.
கூத்தம்பூண்டி பகுதி
யில் தோட்டக்கலைதுறை சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாச
னம் அமைத்து தர்பூசணி பயிரிட்டுள்ளதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். எலச்சிபாளையம் பி.டி.ஓ., பாலவிநாயகம், வேளாண்மை இணை இயக்குனர் மல்லிகா, தோட்டக்கலைதுறை இணை இயக்குனர் புவனேஷ்வரி உள்பட பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் உடனிருந்தனர்.