/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ துாய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கு பணியிடம் மாற்றியும் செல்லாமல் அடம் துாய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கு பணியிடம் மாற்றியும் செல்லாமல் அடம்
துாய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கு பணியிடம் மாற்றியும் செல்லாமல் அடம்
துாய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கு பணியிடம் மாற்றியும் செல்லாமல் அடம்
துாய்மை பணி மேற்பார்வையாளர்களுக்கு பணியிடம் மாற்றியும் செல்லாமல் அடம்
ADDED : ஜூலை 03, 2025 01:44 AM
ப.வேலுார்,ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் குப்பை சேகரிக்க, நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், துாய்மை பணியாளர்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்ய வெங்கடேஷ், ஜனார்த்தனன், தாமரைச்செல்வி என, மூன்று துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். இதில், ப.வேலுார் டவுன் பஞ்., துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேஷ், ஜனார்த்தனன் ஆகிய இருவருக்கும், கடந்த மாதம், 19ல் பணி மாறுதல் ஆணை, பேரூராட்சிகளின் ஆணையர் கிரண்குராலா வழங்கினார்.
இதில், ப.வேலுார் டவுன் பஞ்., துப்புரவு துாய்மை மேற்பார்வையாளர் வெங்கடேசன், மல்லசமுத்திரம் டவுன் பஞ்., துப்புரவு மேற்பார்வையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதேபோல், ஜனார்த்தனன், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் டவுன் பஞ்.,க்கு துப்புரவு மேற்பார்வையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார்.
பணி மாறுதல் செய்யப்பட்டு பல நாட்களாகியும், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் இருந்து பணியிலிருந்து விடுபடாமல் பணியை இங்கேயே தக்க வைத்துக்கொள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் உதவியை நாடி வருவதாக புகார் எழுந்துள்ளது.