/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வுஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
நாமக்கல் : மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய ஓட்டு மிஷின்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லுாரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாளை, 4 காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 14 மேசைகள் வீதம், மொத்தம், 84 மேசைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் பார்வையாளர் பார்வையிட்டார்.
மேலும், வேட்பாளர்கள், ஏஜன்ட்கள் ஓட்டு எண்ணும் பணியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதி, அவர்கள் வந்து செல்வதற்கான பாதை, ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக, ஓட்டு எண்ணிக்கையை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்துவது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஓனில் கிளமெண்ட் ஓரியா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.