ADDED : செப் 11, 2025 01:38 AM
ப.வேலுார் :நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி அருகே திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 48; தமிழக விவசாயிகள் சங்க தலைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, பரமத்தி அருகே கோனுார் கந்தம்பாளையம் கிராமத்தில், விவசாய தோட்டத்தில் தென்னை மரத்தில் கள் இறக்க அனுமதி வேண்டி போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து தென்னை மரத்தில் கள் இறக்கியுள்ளார். பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த, 3 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி மீது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரத்தின் கள் இறக்கியதாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.