/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி
கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி
கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி
கார் மரத்தில் மோதி விபத்து: வாலிபர் பலி
ADDED : ஜூன் 23, 2025 05:02 AM
மோகனுார்: மோகனுார் பஸ் ஸ்டாண்ட் அருகே பாத்திர கடை நடத்தி வந்-தவர் கிருஷ்ணன் மகன் சந்தோஷ், 28. இவர், நேற்று தன், 'நிஷான்' காரில், கொல்லிமலை சென்றுவிட்டு மோகனுாருக்கு வந்து கொண்டிருந்தார்.
மோகனுார் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. நாமக்கல் - மோகனுார் சாலை, தோப்பூர் கொங்கு திருமண மண்டபம் அருகே வந்தபோது, கார் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்-தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.