/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்புபெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு
ADDED : மே 19, 2025 02:06 AM
நாமக்கல்: கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஏற்கனவே 'டிபாஸிட்' அட்டை பெற்ற பயனாளிகள் சிலர், பெண் குழந்தைகளுக்கு, 18 வயது முதிர்வடைந்தும், முதிர்வு தொகையை பெறவில்லை. முதிர்வு தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் வகையில், அவர்களின் விபரங்கள், நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில், 231 பயனாளிகள், 2ம் கட்டத்தில், 134 பயனா-ளிகள் என மொத்தம், 365 பயனாளிகள் இதுவரை முதிர்வு தொகையை பெறவில்லை. அவர்களை கண்டறிய இயலாததால், அவர்களை கண்டறியும் வகையில், பயனாளிகளின் விபரங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இதுவரை முதிர்வு தொகை பெறாதவர்கள், முதிர்வு தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம். அவர்கள், 'டிபாஸிட்' பத்திரம் அசல் மற்றும் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவல-கத்தில் சமர்ப்பித்து, பெண் குழந்தைள் பாதுகாப்பு திட்ட முதிர்-வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்-துள்ளார்.