/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'குடி'மகன்களின் கூடாரமாகிய புதன்சந்தை பஸ் ஸ்டாப் 'குடி'மகன்களின் கூடாரமாகிய புதன்சந்தை பஸ் ஸ்டாப்
'குடி'மகன்களின் கூடாரமாகிய புதன்சந்தை பஸ் ஸ்டாப்
'குடி'மகன்களின் கூடாரமாகிய புதன்சந்தை பஸ் ஸ்டாப்
'குடி'மகன்களின் கூடாரமாகிய புதன்சந்தை பஸ் ஸ்டாப்
ADDED : ஜூன் 30, 2025 04:37 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், இதை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் வேலைக்கு வந்து செல்ல புதன்சந்தை பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மக்கள், பஸ்களில் செல்ல காலை, மாலை நேரங்களில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். இதனால், இப்பகுதி பயணிகளின் வசதிக்காக, சேலம், நாமக்கல் பைபாஸ் சாலையின் மேம்பாலத்தின் அடியில், சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது.
இந்த பஸ் ஸ்டாப் சில தினங்கள் மட்டுமே பராமரிப்பில் இருந்த நிலையில், இரவில், 'குடி'மகன்கள் கூடாரமாக மாறியதுடன், உடைந்த பாட்டில்கள், குப்பைகளாக கிடப்பதால், துார்நாற்றம் வீசி வருகிறது. எனவே, பஞ்., நிர்வாகம் இந்த பஸ் ஸ்டாப்பை பயணிகள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.