/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்கால் பராமரிப்பு பள்ளிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்கால் பராமரிப்பு
பள்ளிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்கால் பராமரிப்பு
பள்ளிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்கால் பராமரிப்பு
பள்ளிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்கால் பராமரிப்பு
ADDED : மே 14, 2025 01:59 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10 கி.மீ., துாரத்திற்கு பிரதான மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. இந்த பிரதான வாய்க்காலில் இருந்து பல இடங்களில் கிளை வாய்க்கால் பிரிகிறது. ஆண்டுதோறும் பாசனத்திற்கு வரும்போது, இந்த பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் வழியாக கடைமடை வரை வயல்வெளிகளுக்கு செல்லும். கடந்த, ஐந்து மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.
இதனால் வாய்க்காலின் பெரும்பாலான இடங்களில் முட்புதர் அதிகளவு வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குப்பைக்கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. சில நாட்களாக, குமாரபாளையம் நீர்வளத்துறை சார்பில், பிரதான வாய்க்காலில் முட்புதர், குப்பை, கழிவுகள் அகற்றி பராமரிப்பு பணி நடந்தன. இதேபோல், நேற்று முதல் கிளை வாய்க்காலிலும் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.