ADDED : ஜூன் 09, 2025 04:32 AM
குமாரபாளையம்: உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தையொட்டி, குமாரபா-ளையம் தளிர்விடும் பாரதம், அரசு மருத்துவமனை இணைந்து, ரத்ததான முகாம் நடத்தின. தளிர்விடும் பாரதம் தலைவர் சீனி-வாசன், ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கவியரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
டாக்டர் நித்தியானந்தன் முகாமை தொடங்கி வைத்தார். குமாரபாளையத்தில் உள்ள பல்-வேறு பொது நல அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ரத்ததான கொடையாளர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கண்ணன் மற்றும் குழுவினர் பங்கேற்று, ரத்த வகைகளை சேகரித்தனர்.