/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பா.ஜ.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பா.ஜ.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பா.ஜ.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பா.ஜ.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பா.ஜ.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
ADDED : ஜூன் 22, 2025 12:53 AM
நாமக்கல், மதுரையில், இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர். இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோவிலில், 'வெற்றி வேலு'க்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் நாமகிரி தாயார் கோவில், நரசிம்மர் சுவாமி கோவில் ஆகியவற்றில், வேலுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அதையடுத்து, ஆஞ்சநேயர் கோவிலில், வெற்றி வேலை சுமந்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் கூறியதாவது: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடப்பதையொட்டி, வெற்றி வேலுக்கு, தத்தகிரி முருகன் கோவில், நாமக்கல் நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த, 'வெற்றிவேல்' முருக பக்தர்கள் மாநாட்டு திடலில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்படும். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து, 5,000 பேர் மாநாட்டில் கலந்து கொள்ளகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம்குமார், பிரபு, மாவட்ட செயலாளர்கள் கணபதி, சரவணன், ஜெயா, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.