ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
நாமகிரிப்பேட்டை: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், பா.ஜ., பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டம் நடந்தது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதாசன், முருகேசன், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாநில பொருளாதார பிரிவு கார்த்தீஸ்வரன், மாவட்ட செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதீர்மானம், பட்ஜெட் குறித்து விளக்கி பேசினர்.