ADDED : ஜூன் 05, 2025 01:23 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், வரகூரில் ஓம் குருவனம் உள்ளது. இங்கு பூதநாத சுவாமி ஐயப்பன் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர், கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தனர்.
முன்னாள் காவல் துறை தலைவர் பாரி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம், ஸ்ரீதர்மசாஸ்தா ராஜ பரம்பரை பந்தள மகாராஜா, புதுக்கோட்டை ராஜராஜ வர்ம தம்புரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.