ADDED : செப் 02, 2025 01:20 AM
ப.வேலுார்;ப.வேலுார் பழைய பைபாஸ், சிவா தியேட்டர் கார்னர் பகுதியில் உள்ள நான்கு ரோட்டில் ஜே.சி., வேலுார் விருட்சம் சார்பில், மணிக்கூண்டு திறப்பு விழா நேற்று நடந்தது. பரமத்தி வேலுார் முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
மண்டல தலைவர் மணிகண்டன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஜே.சி., ப.வேலுார் தலைவர் தனபால், செயலாளர் பிருந்தா, பொருளாளர் யுவராஜ் மற்றும் துணை தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.