/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அனைத்து வணிகர் சங்க விழா:மாநில தலைவர் பங்கேற்பு அனைத்து வணிகர் சங்க விழா:மாநில தலைவர் பங்கேற்பு
அனைத்து வணிகர் சங்க விழா:மாநில தலைவர் பங்கேற்பு
அனைத்து வணிகர் சங்க விழா:மாநில தலைவர் பங்கேற்பு
அனைத்து வணிகர் சங்க விழா:மாநில தலைவர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2025 01:28 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் அனைத்து வணிகர் சங்க விழா நடந்தது. சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
குமாரபாளையம் சங்கத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துள்ளோம். சாமானிய வணிகர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் திரும்பி வந்ததும், அவரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மத்திய வர்த்தக துறை அமைச்சரிடம், வரும் செப்., 7ல் டில்லியில், சந்தித்து, 21 கோடி பேர் சில்லறை வணிகர்கள் வாழ்வாதாரம் காப்பாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை வைக்க உள்ளோம். 50 சதவீத வரி உயர்வால், இங்கிருந்து அனுப்பப்படும் சரக்குகள் பாதி வழியில் நிறுத்தப்படுகிறது. துாத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்ட கோடி கணக்கான விலை மதிப்புள்ள மீன்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் பகுதியை சேர்ந்த ஜவுளித்துறையை சேர்ந்தவர்கள் மிகவும் நலிய தொடங்கியுள்ளனர். குமாரபாளையத்தில் சாயப்பட்டறை பிரச்னை கடுமையாக உள்ளது இதற்கு தீர்வாக சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக அரசே அமைத்து, சாயப்பட்டறை தொழிலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், சங்க செயலர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.