ADDED : மே 30, 2025 01:24 AM
எருமப்பட்டி :எருமப்பட்டி யூனியனில் உள்ள, காவக்காரப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காவக்காரன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில், 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.