ADDED : செப் 06, 2025 01:26 AM
குமாரபாளையம் :குமாரபாளையம் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். கூட்டத்தில், வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 18, 19, 20 என, மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் நாளான, வரும், 18ல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியிலும்; 19ல், நாமக்கல், ப.வேலுார் தொகுதியிலும்; 20ல், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.