/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு பூங்கொத்து வழங்கி மாணவர்களுக்கு வரவேற்புகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு பூங்கொத்து வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு பூங்கொத்து வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு பூங்கொத்து வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு பூங்கொத்து வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 11, 2024 06:23 AM
நாமக்கல்: கோடை விடுமுறைக்கு பின், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களுக்கு இனிப்பு, பூங்கொத்து அளித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
பள்ளி இறுதி தேர்வுக்கு பின், தமிழகம் முழுவதும் ஏப்., மூன்றாம் வாரத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், ஜூன், 10ல், அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக, பள்ளி வளாகம் துாய்மை, பாடநுால் கொள்முதல், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், அரசின் விலையில்லா பாடநுால்கள், நோட்டுப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் பெரியண்ணன் தலைமையில், மாணவர்களுக்கு, இனிப்பு, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அதையடுத்து, பேனா, பென்சில், ஸ்கெட்ச் போன்ற உபகரணங்கள், பாடநுால்கள், நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. பி.டி.ஏ., தலைவர் நாகரத்தினம், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.