/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : ஜூன் 02, 2025 06:44 AM
நாமக்கல்: நாமக்கல் விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி பகுதிகள் மற்றும் ஏற்கனவே விடுபட்ட பகுதிகளில், 220 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் மூலம் இந்த பணியை செய்து வருகிறது. பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளில் பல்வேறு இடங்களில் குறைபாடுகள் உள்ளதாக, பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சிக்கு உட்பட்ட, 21வது வார்டு போதுப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, ஒப்பந்த விதிகள்படி பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறதா என, கேட்டறிந்தார். தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை அழைத்து, 'பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், அரசு விதிமுறைகளின்படி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார். திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.