/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குறிஞ்சி பள்ளி மாணவிக்கு நடிகர் விஜய் பாராட்டுகுறிஞ்சி பள்ளி மாணவிக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவிக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவிக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவிக்கு நடிகர் விஜய் பாராட்டு
ADDED : ஜூன் 30, 2024 03:40 AM
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, காவேட்டிபட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளியில் கடந்தாண்டு, பிளஸ் 2 படித்த மாணவி சானியா, அறிவியல் பாட பிரிவில், 600க்கு, 593 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார். அந்த மாணவியை, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், சென்னையில் நடந்த விழாவில் கவுரவித்து, விருது வழங்கி பாராட்டினார்.