/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புதர்மண்டிய மழைநீர் ஓடை சீரமைக்க நடவடிக்கை தேவை புதர்மண்டிய மழைநீர் ஓடை சீரமைக்க நடவடிக்கை தேவை
புதர்மண்டிய மழைநீர் ஓடை சீரமைக்க நடவடிக்கை தேவை
புதர்மண்டிய மழைநீர் ஓடை சீரமைக்க நடவடிக்கை தேவை
புதர்மண்டிய மழைநீர் ஓடை சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 02, 2025 06:43 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் ஓடை செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தால், இந்த ஓடையில் தான் மழைநீர் செல்லும். சில ஆண்டாக பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், ஓடையில் முட்புதர் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. மேலும், குப்பை, கழிவுகள் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால், மழைநீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்ய துவங்கிவிட்டதால், கனமழை பெய்யும் போது, மழைநீர் சாலையில் செல்லும் நிலை ஏற்படும்.
எனவே, ஓடையில் வளர்ந்துள்ள முட்புதர், குப்பைக்கழிவுகளை அகற்றி, ஓடையை சீரமைக்க வேண்டும். மேலும், ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைத்து மழை நீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.