/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலை 'சூட்டிங் ஸ்பாட்' சாலையில் விபத்து தடுப்பான் பணி: விரைந்து முடிக்கப்படுமா? கொல்லிமலை 'சூட்டிங் ஸ்பாட்' சாலையில் விபத்து தடுப்பான் பணி: விரைந்து முடிக்கப்படுமா?
கொல்லிமலை 'சூட்டிங் ஸ்பாட்' சாலையில் விபத்து தடுப்பான் பணி: விரைந்து முடிக்கப்படுமா?
கொல்லிமலை 'சூட்டிங் ஸ்பாட்' சாலையில் விபத்து தடுப்பான் பணி: விரைந்து முடிக்கப்படுமா?
கொல்லிமலை 'சூட்டிங் ஸ்பாட்' சாலையில் விபத்து தடுப்பான் பணி: விரைந்து முடிக்கப்படுமா?
ADDED : ஜூன் 07, 2025 01:31 AM
சேந்தமங்கலம், கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல், அருகில் உள்ள மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, துறையூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டூவீலர்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதுபோல், வரும் சுற்றுலா பயணிகள் காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சோளக்காட்டிற்கு செல்கின்றனர்.
இதுபோல் வரும் சுற்றுலா பயணிகள், 70வது கொண்டை ஊசி வளைவு மற்றும் மலைப்பகுதியில் உள்ள ஆபத்தான வளைவுகளில் செல்லும்போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்கும் வகையில், கொண்டை ஊசி வளைவில், 29 இடங்களில் உருளை விபத்து தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொல்லிமலையில் மிகவும் ஆபத்தான வளைவுகளில் உருளை விபத்து தடுப்பான் அமைக்கப்பட உள்ள நிலையில், சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் சாலையில் உள்ள, 'சூட்டிங் ஸ்பாட்' என்ற அடர்த்தியான வனப்பகுதியில் உருளை விபத்து தடுப்பான் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுலா பயணிகள் கூறியதாவது: மலையில் அடர்ந்த வனப்பகுதியாக இந்த, 'சூட்டிங் ஸ்பாட்' உள்ளது. இந்த வழியாக செம்மேட்டிற்கு செல்லும் போது, காலை, 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு நேரத்தில் இந்த இடத்தில் மூடு பனி உள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற விளக்கை எரிய விட்டபடி செல்கின்றனர். ஆனால், ஒரு சில நேரங்களில் சாலை திரும்புவது தெரிவதில்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இந்த இடத்தில் உருளை விபத்து தடுப்பான் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.