/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளிப்பாளையத்தில் ஆதார் மையம் துவக்கம் பள்ளிப்பாளையத்தில் ஆதார் மையம் துவக்கம்
பள்ளிப்பாளையத்தில் ஆதார் மையம் துவக்கம்
பள்ளிப்பாளையத்தில் ஆதார் மையம் துவக்கம்
பள்ளிப்பாளையத்தில் ஆதார் மையம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 01:32 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்.,கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆதார் கார்டு புதுப்பித்தல், புகைப்படம் மாற்றம் செய்தல், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி, மொபைல் எண் மாற்றம், இணைத்தல் உள்ளிட்ட, ஆதார் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும்.
இதனால் கடைக்கோடியில் உள்ள புதுப்பாளையம், காடச்சநல்லுார், கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், சமயசங்கலி, பாதரை உள்ளிட்ட பெரும்பாலான பஞ்., மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால், பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்திலேயே ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும் என, கடந்த, 1ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, நேற்று முதல் பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.