/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பயன்பாட்டுக்கு திறக்காத சுகாதார வளாகம் 'வீண்' பயன்பாட்டுக்கு திறக்காத சுகாதார வளாகம் 'வீண்'
பயன்பாட்டுக்கு திறக்காத சுகாதார வளாகம் 'வீண்'
பயன்பாட்டுக்கு திறக்காத சுகாதார வளாகம் 'வீண்'
பயன்பாட்டுக்கு திறக்காத சுகாதார வளாகம் 'வீண்'
ADDED : ஜூன் 01, 2025 01:14 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல் வேங்காத்தாள் காலனி பகுதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு வீட்டுமனை கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்காக இங்கு, 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 2015ல் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மின் இணைப்பும் பெறவில்லை. தண்ணீர் வசதியும் செய்யவில்லை.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் இதுவரை திறக்கப்படாமலேயே சேதமடைந்து வருகிறது. பத்தாண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. கட்டடம் சேதமடைந்து உள்ளதுடன், உள்ளே செல்லாதவாறு முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இனி வரும் காலங்களில் சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.