/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 02, 2025 02:10 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள, காளப்பநாயக்கன்பட்டியில் புளியமரம் முறிந்து விழுந்ததில், 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காளப்பநாயக்கன்பட்டி-காரவள்ளி சாலையில், பெருமாபட்டி காலனி மயான சுற்றுச்சுவருக்கு அருகில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. மரத்தின் அடியில் ஒரு பகுதியில் ஏற்கனவே கரையான் அரித்திருந்தது. கடந்த சில நாட்களாக, அடிக்கடி காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதையறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து, முறிந்து விழுந்த புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காளப்பநாயக்கன்பட்டி-காரவள்ளி சாலையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.