/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதுக்கோட்டை பஞ்சாயத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்புதுக்கோட்டை பஞ்சாயத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
ADDED : ஜூன் 01, 2024 06:27 AM
எருமப்பட்டி : எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தின் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் பின்புறம், கிராம மக்களின் பயன்பாட்டிற்காக, கடந்த, 2014ல் பஞ்., மூலம், 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
இந்த சமுதாய கூடத்தில், அப்பகுதி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், பஞ்., சார்பில் முறையாக பராமரிப்பு செய்யாததால், சமுதாயக்கூடம் அப்போதே பூட்டப்பட்டது.அதன் பின், வந்த பஞ்., தலைவர்கள் இந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால், கடந்த, 10 ஆண்டுகளாக சமுதாய கூடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் தற்போது, இந்த கட்டடம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியதால், அரசு பணம், 4 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.