/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளி மாணவர்களுக்கு வழங்க 77,000 புத்தக பைகள் தயார்பள்ளி மாணவர்களுக்கு வழங்க 77,000 புத்தக பைகள் தயார்
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 77,000 புத்தக பைகள் தயார்
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 77,000 புத்தக பைகள் தயார்
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 77,000 புத்தக பைகள் தயார்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க, 77,000 புத்தக பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அதில், 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளும், அதற்கான பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையில், ரோஸ் நிறத்திலும், 4ம் வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரையில் நீல நிறத்திலும், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கறுப்பு நிறத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.நாமக்கல் மாவட்டத்திற்கு, மொத்தம், 1.40 லட்சம் புத்தக பைகள் தேவைப்படும் நிலையில், முதல்கட்டமாக, 77,000 பைகள் வந்துள்ளன. இவை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. புத்தக பையானது தரப்பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து உத்தரவு வந்ததும் மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.