ADDED : ஜூன் 27, 2025 01:40 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், 6 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
சேந்தமங்கலம் வளையல்காரர் வீதியை சேர்ந்தவர் முகமதுசமீர், 50. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கூரையில் இருந்த ஓடுகளை பிரித்து, உள்ளே இறங்கி பீரோவில் வைத்திருந்த, 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து, முகமதுசமீர் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.