Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஜூலை 2வது வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு துவக்கம்

ஜூலை 2வது வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு துவக்கம்

ஜூலை 2வது வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு துவக்கம்

ஜூலை 2வது வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு துவக்கம்

ADDED : ஜூன் 10, 2024 01:44 AM


Google News
நாமக்கல்: 'வரும் ஜூலை, 2-ம் வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு துவங்குகிறது' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் சிவக்குமார் கூறினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்குட்பட்ட, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, முன்னாள் மாணவர்கள், 5 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கலையரங்கம் கட்டி உள்ளனர். அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் சிவக்குமார், புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து, விழா மலர் வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கால்நடை மருத்துவ அறிவியல் பாடத்திற்கு தொடர்ந்து மாணவர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தாண்டு தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட, 3 கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், தலா, 20 இடங்கள் வீதம், 60 இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு சேர்க்கை நடக்க உள்ளது. இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, 660 சேர்க்கை இடங்களும், உணவு, 40, கோழியினம், 40, பால்வளம், 20, ஆகிய தொழில் நுட்ப பட்டப் படிப்புகளுக்கு மொத்தம், 100 இடங்களும், மாணவர்கள் சேர்க்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, தமிழக மாணவர்களுக்கு, 600 இடங்களும், அகில இந்திய மாணவர்களுக்கு, 60 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் உள்ள, 15 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக முதன்மை பல்கலையாக திகழ்ந்து

வருகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் சேர்க்கை பெறுவதற்கு, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கால்நடை மருத்துவர் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பிற்கு, வரும், 21 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை, இப்படிப்பில் சேர, 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை, 2-ம் வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு துவங்குகிறது. பிளஸ் 2 வகுப்பில் பயாலஜி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us