/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைப்பு மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைப்பு
மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைப்பு
மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைப்பு
மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதியில் 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைப்பு
ADDED : செப் 11, 2025 01:39 AM
நாமக்கல் :''மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், மொத்தம், 267 ஓட்டுச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் ஓட்டு சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளில், மொத்தம், 1,629 ஓட்டு சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தல், பழுதடைந்த நிலையிலுள்ள ஓட்டுச்சாவடிகளை மாற்றுதல், ஓட்டுச்சாவடிகளின் அமைவிட மாற்றம், தரம் உயர்த்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் ஓட்டுச்சாவடிகளை ஒன்றிணைத்தல் ஆகியவை தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களால், அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அதில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதால் பிரிக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடிகள், மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டிய ஓட்டுச்சாவடிகள், 2 கி.மீ.,க்கு மேல் தொலைவு உள்ள ஓட்டுச்சாவடிகள் என, 207 ஓட்டுச்சாவடிகளும், 2 ஒன்றிணைத்தல் ஓட்டுச் சாவடிகளும், 6 தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர் மாற்றம் செய்ய வேண்டிய ஓட்டுச்சாவாடிகளும், 52 அமைவிடம் மாற்றம் ஓட்டுச்சாவடிகளும் உள்ளது என, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் இறுதி செய்து பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட இந்த, 267 ஓட்டுச்சாவடிகள் பிரித்தல் மற்றும் மாற்றம் குறித்து, முன்மொழிவுகள் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.