/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 2,400 முட்டை அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை 2,400 முட்டை அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
2,400 முட்டை அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
2,400 முட்டை அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
2,400 முட்டை அழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூன் 10, 2025 01:32 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள், பள்ளிப்பாளையம் அருகே புதன் சந்தை பகுதியில் உள்ள முட்டை கடையில், நேற்று மாலை ஆய்வு செய்தனர். அப்போது, உடைந்த மற்றும் ரத்தக்கரை, கோழிக்
கழிவுடன் கூடிய, 2,400 முட்டைகளை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தார். இதையடுத்து நோட்டீஸ் வழங்கி, 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், கடை உரிமையாளரிடம், உணவகங்கள் மற்றும் துரித உணவு கடைகளுக்கு தரமான முட்டைகளை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் முட்டை வாங்கும்போது, அதில் எந்த கரையும் இல்லாமல் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். உடைந்த மற்றும் ரத்தக்கரை, கோழி கழிவுகளுடன் கூடிய முட்டையை பயன்படுத்தும்போது வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அந்த முட்டைகளை தவிர்க்க வேண்டும். முட்டையை உடைத்தவுடன் பயன்படுத்த வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.