/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கலை திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தில் 20 குழு பதிவுகலை திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தில் 20 குழு பதிவு
கலை திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தில் 20 குழு பதிவு
கலை திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தில் 20 குழு பதிவு
கலை திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தில் 20 குழு பதிவு
ADDED : மார் 24, 2025 06:32 AM
நாமக்கல்: கலைத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுவினருக்கான நிகழ்ச்சி பதிவு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், நேற்று முன்தினம் தொடங்கியது. ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
இரண்டாம் நாளான நேற்று, தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களில், மாவட்டம் முழுவதும் இருந்து, 20 கலைக்குழுவினர் பங்கேற்று, தங்களது நிகழ்ச்சியை பதிவு செய்தனர். அதில், ஜவகர் சிறுவர் மன்ற கலை ஆசிரியர்கள் சரவணன், பாண்டியராஜன், வினோத்குமார், பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர்.