/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி
டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி
டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி
டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி
ADDED : மார் 17, 2025 04:49 AM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தை சேர்ந்த மலையாளி மகன் தமிழரசன், 20; சமோசா வியாபாரி. வியாபாரத்தை முடித்துக்கொண்டு, புல்லட் பைக்கில் பொத்த-னுாரில் இருந்து பாண்டமங்கலத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சென்றார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சின்னசாமி மகன் பாலாஜி, 21; கூலி தொழிலாளி. 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' டூவீலரில் பொத்தனுார் நோக்கி வந்தார். பொத்தனுாரில் இரு டூவீலர்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இருவரும் ஹெல்மெட் அணியாததால், தலையில் பலத்த காயமடைந்தனர். ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் இறந்து விட்டது தெரிய வந்தது. ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.