ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
குமாரபாளையம் : குமாரபாளையத்தில், அரசு மது பானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வட்டமலை, காலனி மருத்துவமனை ஆகிய இடங்களில் மது விற்றுக்கொண்டிருந்த, பெருமாள், 51, சசிகுமார், 36 ஆகிய இருவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.