வழிப்பறி வழக்கு மேலும் 2 பேர் கைது
வழிப்பறி வழக்கு மேலும் 2 பேர் கைது
வழிப்பறி வழக்கு மேலும் 2 பேர் கைது
ADDED : ஜூன் 05, 2025 01:40 AM
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி நடுக்காலனியை சேர்ந்தவர் முத்துசாமி, 51; இவர், திம்மநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். கடந்த, 31 இரவு, விற்பனை தொகை, 2.41 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த, ஐந்து பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு, பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து மங்களபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், நேற்று முன்தினம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் உச்சிமகாலி, 22, சுப்பையா மகன் நவநீதன், 22, கார்த்தி பெருமாள், 22, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு லட்சத்து, 50,000 ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அரியநாயகபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் செல்வகுமார், 19, மற்றும் 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.