/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
158 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூன் 22, 2024 12:22 AM
நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை, 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 158 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 46 திருநங்கைகளுக்கு, 3.93 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, 'திருநங்கை' என அழைக்க சட்டம் இயற்றினார். இந்தியாவிலேயே முதல் முறையாக, 'தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்' 2008ல், கருணாநிதி உருவாக்கினார். நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை, 171 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 158 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள, 50 திருநங்கைகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுவரை, 12 திருநங்கைகளுக்கு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சுயதொழில் மானியம், தலா, 50,000 வீதம், மொத்தம், 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.