/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2025 01:10 AM
நாமக்கல், நாமக்கல், நல்லிபாளையத்தில் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2024-25ல் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாணவி கார்த்திகா, 600க்கு, 598 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம், மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதில், தமிழ்,- 99, ஆங்கிலம், 99, இயற்பியல், 100, வேதியியல், 100, கணினி அறிவியல், -100, கணிதம், - 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதேபோல், மாணவி வர்ஷா, 600க்கு, 593 மதிப்பெண் பெற்று, பள்ளியில், 2ம் இடம்; மாணவன் கார்த்திகேயன், 600க்கு, 588 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியல், 2, வேதியியல், 5, கணினி அறிவியல், 10, கணிதம், 4, பொருளியல், 1, வணிகவியல், 1 என, மொத்தம், 23 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பள்ளி மாணவ,-மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிறுவனர்களான பேராசிரியர்கள் ராஜன், ராஜேந்திரன், தாளாளர் ராஜு, செயலாளர் வாசுதேவன், இயக்குனர்கள் தங்கவேல், ராமசாமி, பள்ளி முதல்வர் திவ்யநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


