Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோகுல்நாதா மிஷன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 100 சதவீதம் வேலை

கோகுல்நாதா மிஷன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 100 சதவீதம் வேலை

கோகுல்நாதா மிஷன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 100 சதவீதம் வேலை

கோகுல்நாதா மிஷன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 100 சதவீதம் வேலை

ADDED : மே 31, 2025 06:41 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராமாபுரம்புதுாரில் கோகுல்நாதா மிஷன் பாராமெடிக்கல், ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அங்கீகாரம் பெற்று, 22 ஆண்டுகளாக தொடர்ந்து மருத்துவம் சாரா, ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் தொழிற்பயிற்சி டிப்ளமோ படிப்புகளை முழுநேரமாக நடத்தி வருகிறது. கலெக்டரின் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் நடக்கும் டிப்ளமோ பயிற்சிகள், நர்சிங் உதவியாளர், லேப் டெக்னாலஜி ரேடியோலாஜி பயிற்சி, கண் மருத்துவ உதவியாளர் பயிற்சி, பஞ்சகர்மா உதவியாளர் பயிற்சி, மருத்துவமனை மேலாண் பயிற்சி.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி, மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி, யோகா ஆசிரியர் பயிற்சி, 'ஏசி' மெக்கானிக் மற்றும் ஆட்டோமொபைல் பயிற்சி என, ஓராண்டு, இரண்டு ஆண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி ஆகியவை பெற்றிருத்தல் வேண்டும். பயிலும் போதே, இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, 100 சதவீதம் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று தருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us