ADDED : ஜூலை 21, 2024 02:45 AM
ராசிபுரம்;ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் சின்னுசாமி மகன் கோபிநாத், 27; கூலித்தொழிலாளி. இவர் வீட்டருகே இருந்த வேப்பம் மரத்தில் மின் கம்பி மோதிக்கொண்டிருந்தது. கடந்த, 7ல் மரத்தில் ஏறி கிளைகளை வெட்ட முயற்சித்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் கோபிநாத்தை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 13 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோபிநாத், நேற்று இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.